திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க


சிவம் பெருக்கும் செல்வர்
மா.பட்டமுத்து M.Sc.,B.T.


சிவம் பெருக்கும் செல்வர் என்று அழைக்கப்படும் இப்பெருந்தகையார் சைவம் தழைக்க அரும்பாடுபட்டு வருகிறார். "சிவநெறிச் செம்மல்", "சிவநெறித் திருத்தொண்டர்", "சிவபுராணீகர்" "சைவ சரபம்" என்ற பட்டங்கள் சைவப்பெருமக்களால் சூட்டப்பட்டவர். சாத்திர, புராண வகுப்புக்களை நல்லமுறையில் சில நகரங்களில் நடத்தி வருகிறார். சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடன் உறை கோமதி அம்பாளை ஆத்மார்த்த மூர்த்திகளாகக் கொண்டவர்.


தான் பிறந்த சங்கரன் கோவிலில்
ஸ்ரீ கோமதி அம்பாள் மாதர் மன்றத்தையும்
திருமந்திர வழிபாட்டு மன்றத்தையும்

விக்கிரமசிங்கபுரத்தில்
ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரக்குழு மன்றத்தையும்
வளர்த்து தமிழகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உழவாரப் பணி செய்தும் வருகிறார்கள்.


 சைவ மக்களின் அரிய பொக்கிஷமான விநாயக புராணத்தை மறுபதிப்பு செய்து நமக்கு வழங்கியுள்ளார்கள். ஊருக்கு ஊர் சிவத்தைப் பெருக்கி "சிவம் பெருக்கும் செல்வர்" என கோயம்பத்தூர் சைவ மக்களால் பாராட்டப் பெற்றவர். திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்து இப்பெருந்தகையாருக்கு "சிவத்தொண்டன்" என்ற விருது 2004 ஆண்டு வழங்கப்பட்டது. அசைவ மக்களை புராணங்களின் மேன்மையும் திருமுறைகளையும் எடுத்துச் சொல்லி சைவமாக்கிய பெருந்தகையர் இவரே ஆவார் என்றால் அது மிகையாகாது.

இவருடைய சொற்பொழிவுகளை கீழ் கண்ட இணைய தளங்களில் காணலாம்.

http://shivasevagan.blogspot.com - To know about 63 Nayanmaars.

http://pattamuthu.blogspot.com - To know about Saivism.