திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சைவ சித்தாந்த சபை
சங்கரன்கோவில்

கோவை கெளமார மடாலயம்
ஆதினகர்த்தர்
தவத்திரு. சுந்தர சுவாமிகள் அவர்கள்
நல்கியருளிய
வாழ்த்து


மெய்கண்ட தேவனென மேவுங் குருபரன்சொல்
சைவசித் தாந்த சபைமேவிப் - பொய்மயலைக்
கொய்சங் கரநயினார் கோயில்உல கம்புகழ்
செய்பண்பு நீடலுற்ற் தே.


கைவந்த நெல்லிக் கனிபோல் இறையருளைச்
சைவசித் தாந்தஅருட் சாத்திரம்போல் - எய்தலில்லை
சங்கரனார் கோயிலிற்சேர் சைவசித் தாந்த சபை
துங்கமுறச் செய்பணிநன்று.


சங்கத் தமிழ்வளர்க்கும் சைவநெறி வாழ்விக்கும்
துங்கமுற்று மக்களுள்ளம் தூயமைசெயும் - மங்களச்சீர்
கைவரச்செய் யுஞ்சங் கரநயினார் கோயில்
சைவசித் தாந்த சபை தான்.


கண்ணியமார் சீர்சங் கரநயினார் கோயில்
நண்ணுசைவ சித்தாந்த நற்சபையும் பண்ணிசையார்
சந்தத் தமிழ்பயிலும் சற்சனரும் வாழியவே
சந்ததமும் இன்பம் தழைத்து.

(22-5-1970)